கடகம் ராசி -இனியவை 40

1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு - சொந்தக்காரர் நீங்கள்!
2. திரைகடல் ஓடியும் திரவியம் தேடுபவர் நீங்கள்!
3. தாயை பேனுபவரும் தாயன்பு கொண்டவரும் நீங்கள்!
4. கடுகளவு காசு இருந்தாலும் கடலளவு பாசம் உடையவர் நீங்கள்!
5. கற்பனை சக்தியில் உங்களை மிஞ்ச ஆளில்லை!
6. அடிக்கடி ஆத்திரம் அடைந்தாலும் அடுத்த நொடியே அமைதியாய் மாறுபவர் நீங்கள்!
7. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதற்கு உதாரணமானவர் நீங்கள்!
8. கிடைத்த இன்றைய நாளினை இனிமையாக வாழ எண்ணம் படைத்தவர் நீங்கள்!
9. காதல் புரிவதில் கண கச்சிதமானவர் நீங்கள்!
10. நடிப்பு நாட்டியத்தில் தன்னிகரற்ற வெற்றியாளர் நீங்கள்!
11. எவரிடமும் எளிதில் பழகக் கூடியவர் நீங்கள்!
12. யாராவது கண்ணீர் விட்டால் அவர் துயர் துடைப்பவர் நீங்கள்!
13. மின்னல் வேகத்தில் செயல்படுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்!
14. கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார் அது நீங்கள் தான்!
15. கடந்த கால நிகழ்வுகளை என்றும் மறக்காதவர் நீங்கள்!
16. மனதில் ஆயிரம் துயரங்கள் இருந்தாலும் வெளியில் தெரியாமல் சிரித்து பேசுபவர் நீங்கள்!
17. நினைத்ததை நடத்தியே முடிப்பார் நீங்கள்!
18. குடும்பத்தினரிடம் வற்றாத பாசம் வைப்பவர் நீங்கள்!
19. ஒரு விஷயத்தை பல கண்ணோட்டத்தில் சிந்தித்து செயல்படுபவர் நீங்கள்!
20. நேர் வழியால் பொருளீட்டுபவர் நீங்கள்!
21. எந்த துறையானாலும் முழு ஈடுபாட்டுடன் துரிதமாக கற்றுக்கொள்பவர் நீங்கள் !
22. எப்பவும் புத்துணர்ச்சியாக காணப்படுபவர் நீங்கள்!
23. விலைமதிப்பற்ற ஆடை ஆபரணங்கள் அணிபவர் நீங்கள்!
24. பலர் நிரம்பியிருக்கும் அரங்கில் தனியாய் பிரகாசிப்பவர் நீங்கள்!
25. பிறர் துன்பத்தில் இருக்கும் போது வலிய சென்று துயர் துடைப்பவர் நீங்கள்!
26. மென்மையான இதயம் படைத்தவர் ஆதலால் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தவர் நீங்கள்!
27. வயோதிகத்திலும் கூட குன்றாத இளமை ததும்ப காணப்படுபவர் நீங்கள்!
28. ஒரே நேரத்தில் பலவற்றை சிந்திக்க கூடியவர் நீங்கள்!
29. எப்பொழுதும் நண்பர்கள் புடைசூழ இருப்பவர் நீங்கள்!
30. காதல் கவிதைகள் எழுதுவதில் தன்னிகரற்ற புலமை வாய்ந்தவர் நீங்கள்!
31. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர் நீங்கள்!
32. யாரையும் எதிர்பார்க்காமல் தன் உழைப்பில் உயர்வடைபவர் நீங்கள்!
33. கணக்கு பார்த்து யாருக்கும் உதவும் எண்ணம் இல்லாதவர் நீங்கள்!
34. கஷ்டம் என்று வந்தவர்க்கு கையில் எது இருக்கிறதோ உடனே கழற்றி கொடுப்பவர் நீங்கள்!
35. நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் நீங்கள்!
36. எந்த குழந்தையை பார்த்தாலும் உடனே சென்று கொஞ்சி குலாவும் எண்ணம் உடையவர் நீங்கள்!
37. அன்புக்கு நான் அடிமை என்பது உங்களது குறிக்கோள்!
38. கோபம் வந்துவிட்டால் எதிரில் யார் இருந்தாலும் பார்க்க மாட்டீர்கள் மனதில் உள்ளதை உடனே கொட்டி தீர்த்து விடுவீர்!
39. யாரையும் பழிவாங்கும் எண்ணம் உங்களுக்கு இல்லை மறப்போம் மன்னிப்போம் என்பது உங்கள் கொள்கை!
40. எடுத்த வேலையை முடிக்கும் வரை ஊன் உறக்கம் இன்றி உழைப்பவர் நீங்கள்!

கடகம் ராசி நேயர்களே உங்கள் நற்குணங்களாகிய இனியவை 40 ம் தெரிந்து கொண்டீர்களா, இதில் இல்லாதவற்றை இனியாவது வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடுங்கள்!

வாழ்க வளமுடன்!

படைப்பு Rtn Phf Aalayam G ஆலயம் ஜி சுவாமிநாதன் DA, BA, MSc (Astro), MA (Philo).,

தொடர்புக்கு: 9842208655 / 0421 4238655

Touch the link below!

Comments

Popular posts from this blog

துலாம் ராசி - இனியவை 40

கும்பம் ராசி - நாடுகளும் நகரங்களும்

க்ரோதி வருட சந்திராஷ்டமம் ரிஷபம் ராசி 2024- 2025