துலாம் ராசி - இனியவை 40

1. நல்ல நட்பிற்கு நல் உதாரண புருஷன் நீங்கள்!
2. தவறு செய்தவர்களை அந்த இடத்திலேயே தட்டிக் கேட்பவர்கள் நீங்கள்!
3. நியாயம் தர்மம் நேர்மை உங்களது சிறப்பம்சம் ஆகும்!
4. சட்டம் படிக்காமலேயே சட்டம் பேசும் இயல்பை பெற்றவர் நீங்கள்!
5. அழகுபடுத்துவதிலும் அலங்கரித்துக்கொள்வதிலும் ஆர்வம் உடையவர் நீங்கள்!
6. நீதியை போதிப்பதிலும் நீதி நெறி வழுவாமலும் வாழ்பவர் நீங்கள்!
7. பெண்களுக்கு முன்னுரிமையும் பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவரும் நீங்கள்!
8. வாக்கு தவறாமையும் நேரந்தவறாமையும் உங்களின் சிறப்பம்சம் ஆகும்!
9. வீட்டை அலங்கரிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை!
10. பழகிய காலங்களை என்றும் மறவாதவர் நீங்கள் நட்பிற்காக எதையும் கொடுப்பவர் நீங்கள்!
11. மனைவியையும் கனவனையும் குழந்தைகளையும் நேசிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை!
12. வாழ்ந்தால் தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற குறிக்கோள் உடையவர் நீங்கள்!
13. யார் பொருளுக்கும் ஆசைபடாதவர் நீங்கள்!
14. கடினமான வேலை கொடுத்தாலும் கணக்காய் செயல்பட்டு வெற்றி பெறுபவர் நீங்கள்!
15. எங்கு சென்றாலும் உங்கள் ஆடை அலங்காரத்தில் திருப்தி அடைந்தால் மட்டும் வெளியில் செல்பவர் நீங்கள்!
16. நியாய தராசு என்றால் அது நீங்கள் தான் எதையும் சீர் தூக்கிப் பார்த்து செயல்படுபவர் நீங்கள்!
17. அகத்தில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் முகத்தில் புன்சிரிப்பை தவழ விடுவீர்கள்!
18. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மனிதர் நீங்கள்!
19. தன்னடக்கமும் தன்மானமுள்ள காப்பதில் தன்னிகரற்ற மனிதர்கள் நீங்கள்!
20. மனம் நொந்த நிலையில் இருந்தாலும் வந்த சொந்தங்களை விழுந்து விழுந்து உபசரிப்பீர்!
21. மானத்தையும் ரோசத்தையும் எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர் நீங்கள்!
22. உங்களது ஆலோசனைகள் எப்போதும் அடுத்தவர் நலன் பயக்கக்கூடியதாக இருக்கும்!
23. பொது அறிவில் வல்லமை உடையவர் நீங்கள்!
24. கச்சிதமாய் உடை உடுத்துவதில் கரைகண்டவர் நீங்கள்!
25. நல்ல நற்பண்புகளுடன் கூடிய குழந்தைகளை வளர்ப்பதில் வல்லவர் நீங்கள்!
26. புன்சிரிப்பும் புதுப்பொலிவுடன் என்றுமே உங்களை இளமையாக வைத்திருக்கும்!
27. தலைமைப் பண்பு உங்களைப் பார்த்து மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டும்!
28. தலைசிறந்த நிர்வாகத்தினால் தன்னிகரற்ற வெற்றியாளர் நீங்கள்!
29. இனிமையான காதல் பாடல்களை எக்காலமும் ரசிப்பவர் நீங்கள்!
30. அறுசுவை உணவு அழகிய கோலம் அற்புதமான கவிதைகள் படைப்பாளர் நீங்கள்!
31. காலத்தால் யார் செய்த தவறுகளையும் எப்பவுமே மறக்காதவர் நீங்கள்!
32. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் எடைபோடுவதில் தராசு நீங்கள்!
33. எந்த ஒரு பிரச்சனை உங்களிடம் வந்தாலும் சரியாய் தீர்ப்பு வழங்குவதில் நியாய தராசு நீங்கள்!
34. விருந்தோம்பலில் உங்களை போல் யாராலும் செயல் பட முடியாது!
35. மக்கள் சேவையாற்றுவதில் எந்த பாகுபாடும் காட்டாதவர் நீங்கள்!
36. பொதுத் தொண்டில் வாரி வழங்கும் வள்ளல் நீங்கள்!
37. எப்பவுமே நடுநிலைபாட்டில் கவனம் செலுத்துவதால் யாருடைய பகைமைக்கும் ஆளாகாதவர் நீங்கள்!
38. கணிதத்துறை கம்ப்யுட்டர் தொழில் நுட்பங்களில் தனி சிறப்பு வாய்ந்தவர் நீங்கள்!
39. தவறென்று தெரிந்தால் தண்டிக்க தவறியதே இல்லை!
40. மொத்தத்தில் மாடு குறைந்தாலும் கொம்பு இளைக்கவில்லை என்ற பழமொழிக்கு சொந்தக்காரர் நீங்கள்!

வாழ்க வளமுடன்!

படைப்பு Rtn Phf Aalayam G Swaminathan DA, BA, MA (Philo)., MSc (Astro).,

தொடர்புக்கு :9842208655 / 0421 4238655



Comments

Popular posts from this blog

கும்பம் ராசி - நாடுகளும் நகரங்களும்

க்ரோதி வருட சந்திராஷ்டமம் ரிஷபம் ராசி 2024- 2025