கும்பம் ராசி - இனியவை 40

1.நிறை குடம் தழும்பாது என்பதற்கு நீங்களே உதாரணம்!
2.மெத்தப்படித்திருந்தாலும் மேதாவி போல் நடந்து கொள்ளாதவர் நீங்கள்!
3.புதிய புதிய ஆராய்ச்சிகள் எப்போதும் செய்து கொண்டிருப்பவர் நீங்கள்!
4.மிக நேர்த்தியாய் வாகனங்களை இயக்குபவர் நீங்கள்!
5.அலட்டல் மிரட்டல் இல்லாமல் ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்துபவர் நீங்கள்!
6.ஆராய்ச்சி படிப்பில் அதிக ஆர்வம் உடையவர் நீங்கள்!
7.சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவர் நீங்கள்!
8.நினைத்ததை அடைய காலம் வரும் வரை காத்திருப்பவர் நீங்கள்!
9.கஷ்டபட்டு காலப்போக்கில் சென்று வெற்றி வாகை சூடுபவர் நீங்கள்!
10.ஆழ்ந்த அறிவும் அபரிவிதமான ஆற்றலையும் உள்ளடக்கியவர் நீங்கள்!
11.எந்த செயலையும் ஆராய்ச்சியில் ஈடுபடாமல் அவசரப்பட்டு இறங்க மாட்டீர்கள்!
12.உண்மையான காதல் உணர்வு உடையவர் நீங்கள்!
13.குடும்பத்தினரிடம் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்துகொள்பவர் நீங்கள்!
14.உடல் சோர்வு அடைந்தாலும் மனச்சோர்வு அடையாதவர் நீங்கள்!
15.எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கதி கலங்காதவர் நீங்கள்!
16.குடத்துக்குள் தீபம் என்பார்களே அதுபோல் அதற்கு சொந்தக்காரர் நீங்கள்தான்!
17.சங்கடங்களை யாரிடமும் புலம்பிதீர்ப்பவர் அல்ல நீங்கள்!
18.குறிப்பறிந்து செயல்படுபவர் நீங்கள்!
19.முன்னெச்சரிக்கைக்கு முன் உதாரணம் நீங்கள்!
20.கண்டவுடன் காதல் கொண்டவுடன் மோதல் எப்போதுமே இல்லை உங்களிடம்!
21.தன்னால் பெற முடியாத வெற்றிகளை தன் பிள்ளைகளை வெற்றியடைய செய்து மகிழ்வீர்கள்!
22.எதற்கும் அசராத துணிச்சல் வீரர் நீங்கள்!
23.ஆத்திரமும் ஆவேசமும் எப்போதுமே இல்லை உங்களிடம்!
24.திட்டமிடுவது தீர்மானிப்பது பிறகு செயல்படுவது உங்களது சிறப்பியல்பு!
25. சுயமாய் சிந்தித்து செயல்படுவது உங்களது தனிச்சிறப்பு!
26. அடிக்கடி யாரிடமும் மாறி மாறி ஆலோசனை கேட்பது இல்லை நீங்கள்!
27. யார் சொல்வதையும் அப்படியே கேட்காமல் உங்கள் பார்வையில் ஆய்வு செய்து அதன்படி நடப்பவர் நீங்கள்!
28. புதுப்புது யோசனைகள் சொல்வது கைவந்த கலை உங்களுக்கு!
29. ஒரு புதிய இலக்கை அடைந்து விட்டால் சமாதனமடையாமல் வேறு இலக்கை நோக்கி பயணப்படுவீர் நீங்கள்! 
30. அதனால்தான் கும்பத்தான் மீளான் என்பது உங்களது ராசியின் பழமொழி!
31. உங்கள் மற்றும் குடும்ப நலன் மீது அக்கறை பின்புதான் சமூக அக்கறை உடையவர் நீங்கள்!
32. எவ்வளவு படித்திருந்தாலும் மேலும் கல்வி கற்கும் ஆர்வம் உடையவர் நீங்கள்!
33. துன்பங்களாலும் துயரங்களாலும் எப்பவுமே  துவளாதவர் நீங்கள்!
34. கடமை கண்ணியம் கடடுப்பாடு இவற்றை என்றுமே மீறாதவர் நீங்கள்!
35. குறுகிய வட்டத்தில் வாழ்ந்தாலும் குறைவில்லாமல் வாழக்கூடியவர் நீங்கள்!
36. பல ஆய்வுகளை செய்து புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அளிப்பவர் நீங்கள்!
37. நேர்த்தியான ஆடம்பரமில்லாமல் ஆடை உடுத்துபவர் நீங்கள்!
38. சரியான முன் எச்சரிக்கையுடன் காரியம் ஆற்றுவதில் வல்லவர் நீங்கள்!
39. குற்றங்களை கண்டுபிடிப்பதில் அளப்பரிய ஆற்றல் படைத்தவர் நீங்கள்!
40. சந்தேகக்கண் கொண்டு இந்த உலகை உற்று நோக்குபவர் நீங்கள்!

படைப்பு Rtn Phf ஆலயம் ஜி சுவாமிநாதன் DA, BA, MSc (Astro), MA (Philo).,

தொடர்புக்கு 9842208655 / 0421 4238655

Touch the link below!

Comments

Popular posts from this blog

துலாம் ராசி - இனியவை 40

கும்பம் ராசி - நாடுகளும் நகரங்களும்

க்ரோதி வருட சந்திராஷ்டமம் ரிஷபம் ராசி 2024- 2025