மகரம் ராசி -இனியவை 40
1. மகரத்தானுடன் வழக்கிடேல்- என்பது உங்களுக்கான பழமொழி!
2. துப்பறியும் ஆற்றல் உங்களுக்கு சிறு வயதிலிருந்தே கை வந்த கலை!
3. நீங்கள் எதை உருவாக்கினாலும் அது பிறருக்கு தான் அதிகம் பயன் தரும்!
4. எந்த வேலையானாலும் அதில் உள்ள சாதக பாதகங்களை உடனே அறிந்து கொள்வீர்!
5. ஆராய்ச்சி குணத்தில் எட்டாத மைல்கல் நீங்கள்!
6. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பதில் வல்லவர் நீங்கள்!
7. தத்துவார்த்தமாக பேசுவது உங்களுக்கு கைவந்த கலை!
8. ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்!
9. சிறுவயது முதலே கஷ்டங்களை அறிந்தவர் நீங்கள்!
10. சந்தேகக் கண் கொண்டு இந்த உலகை பார்ப்பவர் நீங்கள்!
11. கிங் மேக்கர் என்று உங்களை சொன்னால் அது மிகையாகாது!
12. எதற்கும் எப்பவும் பயம் அறியாதவர் நீங்கள்!
13. எதிலும் கணக்கு போட்டு செலவு செய்பவர் நீங்கள்!
14. பக்தி யோகத்தை விட பெரும்பாலும் ஞானயோகத்தில் நாட்டம் இருக்கும்!
15. எவர் ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவரது பலவினத்தை கண்டுபிடித்து விடுவீர்!
16. பல திறைமைகளும் பன்முகத்தன்மையும் உடையவர் நீங்கள்!
17. இன மத வெறிகளுக்கும் அப்பாற்பட்டவர் நீங்கள்!
18. வாழ்வில் சந்தோஷங்கள் இல்லையென்றாலும் அந்த நேரத்தை சந்தோஷமாக என்னுபவர் நீங்கள்!
19. சமூகத்தில் ஏற்படும் அவல நிலைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டுபவர் நீங்கள்!
20. சங்கடங்கள் வந்த போதெல்லாம் தனிமையில் ஆற்றிக்கொள்பவர் நீங்கள்!
21. அதிக செல்வங்கள் இருந்தாலும் அமைதியாய் வாழ்பவர் நீங்கள்!
22. சதிராட்டங்களை தீட்டி யாரும் உங்களை சாய்க்க முடியாது!
23. துன்பங்களை கண்டு என்றுமே துவளாதவர் நீங்கள்!
24. எவ்வளவு வசதி இருந்தாலும் பகட்டினை வெளிக்காட்டாதவர் நீங்கள்!
25. ஆடம்பரமான ஆடை அணிகலன்களை விரும்பாதவர் நீங்கள்!
26. டெக்னிக்கல் கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர் நீங்கள்!
27. சங்கடங்களை தீர்க்கும் உபாயங்களை சட்டென்று பிறர்க்கு உரைப்பவர் நீங்கள்!
28. வேலையில் அடுத்தவர் செய்யும் தவறுகள் உங்களுக்கு உடனே தெரியும்!
29. இரவில் கண்விழித்து படித்து மனப்பாடம் செய்யும் ஆற்றல் உடையவர் நீங்கள்!
30. தவறு செய்யாத பட்சத்தில் தண்டிக்கப்படும் நீங்கள் தவறாமல் பழிவாங்கி விடுவீர்கள்!
31. சட்டத்துறையில் ஈடு இணையற்ற புலமை வாய்ந்தவர் நீங்கள்!
32. அளவற்ற ஆற்றல்களை புதைத்து வைத்திருப்பவர் நீங்கள்!
33. திரைகடல் ஓடியும் திரவியம் தேடுபவர் நீங்கள்!
34. பிறந்த ஊரை விட்டு அயலூரில் பிரகாசிக்க கூடியவர் நீங்கள்!
35. கடந்த கால சம்பவங்களை என்றுமே அசை போடுபவர் நீங்கள்!
36. அதிர்ஷ்டத்தை எப்பவுமே நம்பாதவர் உழைப்பால் உயர்பவர் நீங்கள்!
37. எதிரியை வீழ்த்த ஆயுதம் எடுக்காமல் புதிய வியூகத்தை வகுத்து அவரை தோற்கடிப்பீர்!
38. ஒரே நேரத்தில் பல தொழில்களை துவங்கி செயல் படுத்துபவர் நீங்கள்!
39. தோல்விகளை கண்டு துவளாமல் வெற்றிக்காக எதிர் நீச்சல் போடுபவர் நீங்கள்!
40. மொத்தத்தில் கடவுளே தவறு செய்தாலும் மன்னிக்காத குணம் உண்டு உங்களிடம்!
படைப்பு Rtn Phf ஆலயம் ஜி சுவாமிநாதன் DA, BA, MSc (Astro), MA (Philo).,
தொடர்புக்கு 9842208655 / 0421 4238655
Touch the link below!
Comments
Post a Comment