தனுசு ராசி - இனியவை 40

1. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வென்மை தரும் -என்ற பழமொழிக்கு சொந்தக்காரர் நீங்கள்!
2. இறையான்மையும், மேலாண்மையும், உண்மையும், மென்மையும் உங்களது சிறப்பம்சம்!
3. வில்லானை சொல்லில் வளை -உங்களுக்கான பழமொழி - பேச்சில் உங்களை வெல்ல முடியாது!
4. கஷ்டகாலம் வந்தாலும் கண்கலங்காமல் செயல்படுபவர் நீங்கள்!
5. போர்குணமும் ஆத்திரமூட்டும் செயல்களும் உங்களிடம் எப்போதும் இருந்ததில்லை!
6. யாரும் உங்களை அடிமையாக்க முடியாது அப்படி தெரிந்தால் உடனே விலகி விடுவீர்கள்!
7. நம்பகத்தன்மை, வழிகாட்டும் இயல்பு, உண்மையான பாசம், நல்ல நட்பு இவை அனைத்திற்கும் சொந்தக்காரர் நீங்கள்!
8. பொய்யுரைக்காமை, கடவுள் பக்தி, மனைவிக்கு துரோகம் இழைக்காமை உங்களது இயல்பு!
9. எந்த துறையானாலும் அதில் நேர்மை, கண்ணியம்- உண்மையாய் செயல்படுபவர் நீங்கள்!
10. சமுதாயத்தில் உயர் அந்தஸ்து,தலைமை, பொறுப்பு ஏற்பதற்கு தகுதி வாய்ந்தவர் நீங்கள்!
11. தவறு செய்யாத உங்கள் மீது வீன் பழி சுமத்தப்படும் நிலையில் மிகுந்த மனவருத்தம் அடைவீர்!
12. எவ்வளவு இழப்பீடு வந்தாலும் எல்லாம் கர்மவினை என்று சமாதானம் அடைவீர்!
13. தெய்வ நம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர் நீங்கள்!
14. இயன்றவரை தான தர்மங்கள் செய்வீர்கள் யாரிடமும் தானம் பெற மாட்டார்கள்!
15. வஞ்சகம், சூழ்ச்சி, பொய், புரட்டு என்றுமே இல்லாதவர் நீங்கள்!
16. இல்லாதவர்க்கு இயன்றவரை உதவி செய்பவர் நீங்கள்!
17. பெற்றோரை பேணிக் காப்பதில் நற்பெயர் பெற்றவர் நீங்கள்!
18. கற்பதிலும் கற்பிப்பதிலும் கண்டிப்பதிலும் தன்னிகரற்றவர் நீங்கள்!
19. ஆலோசனையும் அறிவுரையும் சொல்லக்கூடிய நிலையில் இருப்பீர்கள்!
20. யாருடைய அறிவுரையும் ஆலோசனையும் கேட்கும் நிலையில் இருக்கமாட்டீர்கள்!
21. சுயநலமின்றி குடும்ப நலம் பேனக்கூடியவராக இருப்பவர் நீங்கள்!
22. கடன் கொடுத்தாலும் கொடுப்பீர்கள், கடன் வாங்க விருப்பம் இருக்காது உங்களுக்கு!
23. யதார்த்தமும் பரோபகார சிந்தனையும் ஒருங்கே பெற்றவர் நீங்கள்!
24. என் கடன் பணி செய்து கிடப்பது என்பது உங்களது தாரக மந்திரம்!
25. உடன்பிறந்தவர் மீது பாசமும் அக்கறையும் உடையவர் நீங்கள்!
26. பிறர்க்கு வழிகாட்டுவதில் கலங்கரை விளக்கம் நீங்கள்!
27. பணத்திற்காக யாரையும் காக்காய் பிடிக்காமை உங்கள் கௌரவம்!
28. எப்பவும் நடிப்பதில்லை, நடிப்பவர்களை கண்டால் பிடிப்பதுமில்லை!
29. எவ்வளவு கஷ்டகாலம் வந்தாலும் மனைவிக்கு துரோகம் இழைக்காமல் இருப்பது உங்கள் தனிச்சிறப்பு!
30. பிறன்மனை நோக்காதிருப்பதும் உங்கள் தனிச்சிறப்பு!
31. தன்னம்பிக்கையை விட தெய்வ நம்பிக்கை உங்களது உயர்வுக்கு வழிவகுக்கும்!
32. நலிந்தவர்களை கண்டால் வலிய வந்து உதவி செய்வீர்கள்!
33. தன் மக்களை சான்றோன் ஆக்க என்றும் இரவு பகலாக உழைப்பவர் நீங்கள்!
34. தன் கௌரவத்தையும் தன்மானத்தையும் என்றும் இழக்க தயாரானவர் இல்லை நீங்கள்!
35. யாரையும் ஏமாற்றுவது இல்லை பிறரிடம் ஏமாந்து போனாலும் அதை சாமார்த்தியமாக சரி கட்டுவர் நீங்கள்!
36. சுக போக பாக்கியங்களுக்கு என்றும் அடிமையாகாதவர் நீங்கள்!
37. எளிமையாக நடந்து வலிமையாக வாழக்கூடியவர் நீங்கள்!
38. பணம் பகட்டு பொழுது போக்கு கேளிக்கை போன்றவைகளுக்கு அடிமையாகாதவர் நீங்கள்!
39. உழைப்பால் உயர்வை பெற விரும்புபவர் நீங்கள்!
40. தன் வாழ்நாளில் யாருக்கும் பாரமாகவும் யார் மனமும் புண்படாதவாறும் வெறுக்கத்தக்க வகையிலும் வாழாதவர் நீங்கள்!

வாழ்க வளமுடன்!

படைப்பு Rtn Phf Aalayam G Swaminathan DA, BA, MA (Philo)., MSc (Astro).,

தொடர்புக்கு :9842208655 / 0421 4238655







Comments

Popular posts from this blog

துலாம் ராசி - இனியவை 40

கும்பம் ராசி - நாடுகளும் நகரங்களும்

க்ரோதி வருட சந்திராஷ்டமம் ரிஷபம் ராசி 2024- 2025