விருச்சிகம் ராசி - இனியவை 40
1. எடுத்த சபதம் முடிப்பேன் என்பது உங்களது சூளுரை ஆகும்!
2. பிடிவாதத்தின் மொத்த உருவம் நீங்களாகத்தான் இருக்க முடியும்!
3. சினம் கொண்டு எழுந்தால் சிங்கமாய் கர்ஜிப்பவர் நீங்கள்!
4. ரகசியம் என்பது உங்களிடத்தில் இருப்பதில்லை!
5. வெளிப்படையான பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கள்!
6. அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்த ஞானம் உடையவர் நீங்கள்!
7. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பவும் கோட்டை கட்டுபவர் நீங்கள்!
8. எதையும் ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடியவர் அல்ல நீங்கள்!
9. ஆய்வு படிப்பில் ஆழ்ந்த ஞானம் உடையவர் நீங்கள்!
10. கஷ்டப்பட்டு கிடைப்பதைக் கொண்டு மனநிறைவை அடைபவர் நீங்கள்!
11. உழைக்காமல் கிடைக்கும் எதையும் உடைமையாக்காதவர் நீங்கள்!
12. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பால் உயர்பவர் நீங்கள்!
13.இந்த உலகத்தை சந்தேகக்கண் கொண்டு உற்று நோக்குபவர்கள் நீங்கள்
14.எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்யாமல் இறங்க மாட்டீர்கள் இது உங்கள் வெற்றியின் ரகசியம்
15.முடிவு எடுக்கும் முன் பலமுறை யோசிப்பீர்கள் முடிவு எடுத்து விட்டால் பின்வாங்க மாட்டீர்கள்
16. முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு சொந்தக்காரர் நீங்கள்
17. ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர் நீங்கள்
18. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனம் தளராமல் போராடும் குணம் உண்டு
19. எவ்வளவு பணம் பொருள் சேர்ந்தாலும் வாழ்வில் எளிமையை கடைபிடிப்பவர் நீங்கள்
20. தாயன்பு முழுமையாக கிடைக்கவில்லை என்பது உங்களது மனக்குறையாக இருக்கும்
21. பிரச்சினைகள் பல வந்தாலும் தீர்வை பற்றியே யோசிப்பீர்கள்
22. சிறு வயதிலேயே மெக்கானிக்கல் மீது அதிக ஆர்வம் காணப்படும்
23. காதல் உணர்வு சற்று குறைந்தே காணப்படும் உங்களிடம்
24. நிலத்தில் முதலீடு செய்து நிகரற்ற லாபம் அடைவீர்
25. புதிய கண்டுபிடிப்புகள் உங்களது பொழுதுபோக்கு ஆகும்
26. உங்களது கடின உழைப்பால் உங்கள் குழந்தைகளை செல்வ செழிப்பாய் வளர செய்வீர்
27. கஷ்டபட்டு சம்பாதித்ததை கண்ணியமாய் காப்பாற்றுபவர் நீங்கள்
28. தள்ளாடும் வயதில் கூட தளராமல் உழைப்பவர் நீங்கள்
29. உண்மையாய் நடந்து உண்மையை பேசி உன்னதமான உயர்வை உய்பவர் நீங்கள்
30. நல்ல நடத்தை உடையவர் நடிக்க தெரியாதவர் நீங்கள்
31. அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பதற்கு ஏற்ப உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துபவர் நீங்கள்
32. யாரையும் புகழ்ந்து பேசுவதும் இல்லை யாருடைய புகழ்ச்சிக்கு அடிமையாவதும் இல்லை நீங்கள்
33. அனைவரின் போற்றுதலுக்கும் சொந்தக்காரர் நீங்கள்
34. தவறுகள் நடப்பதை உடனே சுட்டிக் காட்டுவது உங்களது தனிச்சிறப்பு!
35. ஒருமுறை பிடிக்கவில்லை என்றால் எப்போதும் அவரிடம் நீங்கள் சமாதானம் அடைவதில்லை!
36. குதர்க்கமாக எவரும் உங்களிடம் பேசினால் தர்க்கம் செய்து அவரை வென்று விடுவீர்கள்!
37. பொறாமை குணம் எப்போதும் உங்களிடம் இருந்ததில்லை!
38. பொறுமையும் நிதானமும் உங்களின் வெற்றிக்கு வித்தாக அமையும்!
39. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்களே அதுபோல் கிடைத்தவற்றை பெருமையாக எண்ணி மன நிறைவு அடைவீர்!
40. சிக்கனமும் சேமிப்பும் தேவைக்கேற்ற ஆசையும் பேராசைப் படாத உங்களின் இயல்பு சிறப்பம்சமாகும்!
வாழ்க வளமுடன்!
படைப்பு Rtn Phf Aalayam G Swaminathan DA, BA, MA (Philo)., MSc (Astro).,
தொடர்புக்கு :9842208655 / 0421 4238655
Comments
Post a Comment