கன்னி ராசி - இனியவை 40
1. அறிவே துணை அன்பே சிவம் என்ற சொல்லுக்கு தகுதி வாய்ந்தவர் நீங்கள்!
2. மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்துபவர் நீங்கள்!
3. கள்ளம் கபடம் அற்ற உள்ளம் கொண்டவர் நீங்கள்!
4. உள்ளத்தால் என்றும் கறைபடாதவர் நீங்கள்!
5. உழைத்தால் மட்டுமே உயர்வு என்ற கொள்கை உடையவர் நீங்கள்!
6. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை கையாள்வதில் கைதேர்ந்தவர் நீங்கள்!
7. நல்ல ஆசானாக இருக்க எல்லா தகுதியும் உடையவர் நீங்கள்!
8. கலைகளை கற்றுக் கொள்வதில் ஆர்வம் உடையவர் நீங்கள்!
9. நல்ல நட்பிற்கு நல் உதாரணம் நீங்கள்!
10. விட்டுக்கொடுப்பார் கெட்டுப் போவதில்லை என்பதற்கேற்ப விட்டுக்கொடுப்பவர் நீங்கள்!
11. கடின உழைப்பில் வெற்றி பெறுபவர் நீங்கள்!
12. பங்குச்சந்தையில் பலன் பெறுபவர் நீங்கள்!
13. மயக்கும் பேச்சில் வல்லவர் நீங்கள்!
14. கதை கவிதைகளில் நல்ல புலமை பெற்றவர் நீங்கள்!
15. புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் எப்போதும் காணப்படும் உங்களிடத்தில்!
16. கவலைகள் என்றும் கலங்கடிக்காது கன்னி ராசிக்காரர்களை !
17. தகவல் தொழில்நுட்பத் துறையில் தன்னிகரற்று விளங்குபவர் நீங்கள்!
18. விகடகவித்துவமாய் பேசுவதில் வல்லவர் நீங்கள்!
19. யாரையும் பழிவாங்கும் எண்ணம் என்றுமே வந்ததில்லை உங்களுக்கு!
20. அனைவரையும் அரவணைத்து செல்வதில் வல்லவர் நீங்கள்!
21. குடும்ப பொறுப்புகளை சிறுவயதிலேயே சுமப்பவர் நீங்கள்!
22. உங்களின் யதார்த்தமான பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும்!
23. நடுநிலை தவறாமல் பழகுவதால் நன்பர்கள் அனைவருக்கும் பிடிக்கும் உங்களை!
24. தேவைக்கேற்ப ஆசைப்படுவது உங்கள் சிறப்பம்சம்!
25. பேராசை பெரும் நஷ்டம் என்பது உங்களது கொள்கை ஆகும்!
26. கன்னியம் காப்பதில் கண்ணியமானவர் நீங்கள்!
27. காதல் வலையில் கச்சிதமாய் விழக்கூடியவர் நீங்கள்!
28. கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்களை என்றும் மறவாதவர் நீங்கள்!
29. வஞ்சகமும் சூழ்ச்சியும் என்றும் அறியாதவர் நீங்கள்!
30. நம்பிக்கை துரோகம் யாருக்கும் இழைத்தது இல்லை நீங்கள்!
31. விசுவாசமான வேலையாள் நீங்கள்!
32. அப்பாவித்தனமான உங்கள் செயல்பாடு அனைவரையும் கவர்ந்து விடும்!
33. யாருக்கும் நீங்கள் விரோதியுமில்லை விவகாரமானவரும் இல்லை!
34. உங்கள் சேவை உலகுக்கே பயன்படும்!
35. சுயநலம் இல்லாமல் சுதந்திரமாய் வாழ்பவர் நீங்கள்!
36. குழந்தைகளை என்றும் சுதந்திரமாய் வளர்ப்பீர்!
37. மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மனதளவில் இல்லாதவர் நீங்கள்!
38. மாசற்ற குணத்தினால் மற்றவர்களை ஈர்ப்பவர் நீங்கள்!
39. பகட்டும் பந்தாவும் இல்லாமல் பணிவாய் வாழ்பவர் நீங்கள்!
40. அறிவை பயன்படுத்தி ஆற்றலை வளர்த்து அகிலம் போற்ற வாழ்பவர் நீங்கள்!
கன்னி ராசி நேயர்களே கணக்காய் உங்களை கணித்திருக்கிறேன்!
இனியவை 40யை இனிமேலும் கடைபிடித்து இனிய வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன்!
வாழ்க வளமுடன்!
படைப்பு Rtn Phf Aalayam G Swaminathan DA, BA, MA (Philo)., MSc (Astro).,
தொடர்புக்கு :9842208655 / 0421 4238655
Comments
Post a Comment