சிம்மம் ராசி - இனியவை 40

1.சிங்கம் எப்போதும் சிங்கிளாதான் வரும் என்பதற்கு உதாரணமானவர் நீங்கள்!
2. தனிமையில் இனிமை காணக்கூடியவர் நீங்கள்!
3. வீர தீர பராக்கிரமசாலிகள் நீங்கள் தான்!
4.கஷ்டங்கள் வந்த போதெல்லாம் கண்கலங்காதவர் நீங்கள்!
5. நேரந்தவறாமை உங்களது சிறப்பம்சம்!
6. பணியில் நேர்மை செயலில் தூய்மை மனதில் வைராக்கியம் உடையவர் நீங்கள்!
7. சொந்தக்காலில் நின்று துணிச்சலான வெற்றி பெறுபவர் நீங்கள்!
8. அடிமையாய் இருப்பதில்லை அடிபணியாமை ஆளுமையை விரும்பாதவர் நீங்கள்!
9. சிறுவயதிலேயே ஆளுமைத்தன்மை கொண்டவர் நீங்கள்!
10. கண்டிப்பும் கனிவும் மாறி மாறி காணப்படும் உங்களிடத்தில்!
11. அடிமை வேலையை விட சுயதொழிலில் ஈடுபடுவதே உங்கள் விருப்பம்!
12. நிர்வாகத் திறமையில் தன்னிகரற்றவர் நீங்கள்!
13. உயரிய பதவிகள் வகிப்பதற்கு உரிய தகுதி வாய்ந்தவர் நீங்கள்!
14. அனாவசிய சண்டைக்கு செல்லாதவர், வந்த சண்டையை விடாதவர் நீங்கள்!
15. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு உடையவர் நீங்கள்!
16. கோபம் இருக்கும் உங்களிடத்தில் நற்குணங்களும் அடங்கியிருக்கும்!
17. அசாத்திய துணிச்சல் மிக்க மனிதர் நீங்கள்!
18. வேலையாட்களின் சுக துக்கங்களில் பங்கேற்பவர் நீங்கள்!
19. பகட்டான வாழ்க்கையை எப்போதும் விரும்புபவர் நீங்கள்!
20. வாழ்வின் கடைசி விளிம்பில் நின்றாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர் நீங்கள்!
21. பொதுவாழ்க்கையில் அற்பணிப்புடன் செயல்படுபவர் நீங்கள்!
22. தன்னம்பிக்கையும் விடாப்பிடியும் உங்களது வெற்றிக்கு வழி வகுக்கும்!
23. நெஞ்சம் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வைக்கும் சொந்தக்காரர் நீங்கள்!
24. எவ்வளவு சிக்கலான பிரச்சினை வந்தாலும் எளிதில் தீர்த்து வைப்பவர் நீங்கள்!
25. எவ்வளவு பெரிய படைபலம் வந்தாலும் உங்கள் மனோபலத்தினால் வெற்றி பெறுபவர் நீங்கள்!
26. நம்பகத்தன்மையும் நன்னடத்தையும் ஒருங்கே பெற்றவர் நீங்கள்!
27. தப்பு செய்தவரை மன்னிக்க மாட்டீர்கள் ஆனால் தவறு செய்தவரை மன்னிப்பது உங்கள் இயல்பு!
28. யாராலும் முடியாது என்று விட்ட ஒரு செயலை அற்புதமாக வெற்றி பெற செய்பவர் நீங்கள்!
29. துயரம் என்று ஒருவர் சொல்லி விட்டால் ஓடோடி சென்று துயர் துடைப்பவர் நீங்கள்!
30. எலி வலையானாலும் தனிவலையாய் இருப்பவர் நீங்கள்!
31. உங்கள் குடும்பத்திற்கு தலைசிறந்த வழிகாட்டியாய் இருப்பவர் நீங்கள்!
32. குழந்தைகளை கண்டிப்பாகவும் நேர்மையாகவும் வளர்ப்பவர் நீங்கள்!
33. வலியோருக்கும் எளியோருக்கும் உதவிடும் வகையில் டிரஸ்ட் உருவாக்கும் எண்ணம் உடையவர் நீங்கள்!
34. அரசாங்க உயர் அதிகார பதவிகளுக்கு உரிய தகுதி படைத்தவர் நீங்கள்!
35. எந்த துறையானாலும் அதில் பிரகாசிக்க கடுமையாக உழைப்பவர் நீங்கள்!
36. பிடித்ததை அடைய பிடிவாதமாய் செயலாற்றுபவர் நீங்கள்!
37. எதிலும் முதலிடம் எப்பவும் முதலிடம் எப்படியும் முதலிடம் அடைந்தே தீருவீர்!
38. முடிந்தால் தானம் செய்வீர் யாரிடமும் தானம் பெற மாட்டார்கள்!
39. மக்கள் பணியாற்றுவதில் மகத்தான மனிதர் நீங்கள்!
40. யாருடைய உதவியையும் எப்பவும் நாடாதவர் நீங்கள்!

என்ன சிம்மம் ராசி நேயர்களே! இந்த இனியவை 40 ல் இல்லாத குணங்களை இனியாவது மாற்றிக்கொண்டு வாழ்வில் வெற்றி வாகை சூடுங்கள்!

வாழ்க வளமுடன்!

படைப்பு Rtn Phf Aalayam G ஆலயம் ஜி சுவாமிநாதன் DA, BA, MSc (Astro), MA (Philo).,

தொடர்புக்கு: 9842208655 / 0421 4238655






Comments

Popular posts from this blog

துலாம் ராசி - இனியவை 40

கும்பம் ராசி - நாடுகளும் நகரங்களும்

க்ரோதி வருட சந்திராஷ்டமம் ரிஷபம் ராசி 2024- 2025