மிதுனம் ராசி - இனியவை 40
1. புத்தி அறிவை பயன்படுத்தி புவி ஆள பிறந்தவர்கள் நீங்கள்!
2. அறிவை பயன்படுத்தி அனைத்தையும் வசப்படுத்துபவர் நீங்கள்!
3.நல்ல நட்பிற்கு நல் உதாரணம் நீங்கள்!
4.சாமானியனாய் பிறந்து சான்றோன் ஆக உயர்பவர் நீங்கள்!
5. உறவுகளை பலப்படுத்த உங்களால் மட்டுமே முடியும்!
6. வஞ்சகம், கல்லம், கபடம் அற்றவர் நீங்கள்!
7. தொழில் நுட்ப அறிவில் எட்டா மைல்கல் நீங்கள்!
8. நற்கலைகளை அறிந்து கற்பிப்பவர் நீங்களே!
9. தாய் ஒரு கண் மனைவி ஒரு கண் என்று பார்ப்பவர் நீங்கள்!
10. சண்டையில் ஈடுபடுவதை விட சமாதானத்தை விரும்புபவர் நீங்கள்!
11. கால்குலேட்டர் இல்லாமல் கணக்காய் வாழ்பவர் நீங்கள்!
12. எதிலும் திட்டமிட்டு காய் நகர்த்தி வாழ்வில் வெற்றி பெறுபவர் நீங்கள்!
13. மக்கள் நலன் கருதி மகத்தான சேவை செய்பவர் நீங்கள்!
14. பங்கு சந்தையில் பங்காற்றி வெற்றி பெறுபவர் நீங்கள்!
15. ஆத்திரத்தை குறைத்து அறிவை பெறுக்குபவர் நீங்கள்!
16.கணித துறையில் தன்னிகரற்றவர் நீங்கள்!
17. எளிமையாய் இருந்து வலிமையாலய் வாழ்பவர் நீங்கள்!
18. தன்னலம் பாராது பிறர் நலம் பேனுபவர் நீங்கள்!
19. பொதுநலம் கருதும் பொறுப்பானவர் நீங்கள்!
20. தனிமனிதனாய் உழைத்து தன் குடும்பத்தை மேன்மையடைய செய்பவர் நீங்கள்!
21. பல சிக்கலான பிரச்சினையையும் மதியுகத்தினால் தீர்த்து வைப்பவர் நீங்கள்!
22. கதை, கவிதை, கட்டுரைகளை எழுதுவதில் வல்லவர் நீங்கள்!
23. சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பணியாற்றுபவர் நீங்கள்!
24. வியாபாரத்தில் வியக்கத்தக்க வெற்றி பெறுபவர் நீங்கள்!
25. வாழ்வா சாவா என்ற ஒரு நிலை வரும்போது நடுநிலையில் நின்று வெற்றி வாகை சூடுபவர் நீங்கள்!
26. பிரச்சினை என்று வந்தால் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என்ற கொள்கை உடையவர் நீங்கள்!
27. உடலை வருத்தாமல் அறிவை பயன்படுத்தி பொருள் ஈட்டக் கூடியவர் நீங்கள்!
28. தன் அறிவை பயன்படுத்தி பிறர் தொழிலை விருத்தி செய்பவர் நீங்கள்!
29. பொறுப்பை கொடுத்தால் பொறுப்பாய் செயலாற்றுபவர் நீங்கள்!
30. பொது அறிவில் பல மைல்கல் நீங்கள்!
31. தன் தவறை உணர்ந்து உடனே திருத்திக்கொள்பவர் நீங்கள்!
32. எவ்வளவு கஷ்டகாலம் வந்தாலும் கண்கலங்காதவர் நீங்கள்!
33. எவ்வளவு பெரிய கோபக்காரர்களிடம் கூட உங்கள் குணத்தால் அவரை கவர்ந்து விடுவீர்கள்!
34. அடுத்தவர் வேலைகளை கச்சிதமாய் முடிப்பீர் உங்கள் வேலை தடை பட்டாலும் கூட!
35. மின்னல் வேகத்தில் செயல்வேகம் உடையவர் நீங்கள்!
36. உடல் சோர்வு ஏற்பட்டாலும் மனசோர்வு அடையாதவர் நீங்கள்!
37. கம்ப்யூட்டர் மூளையை விட உங்கள் மூளை சிறப்பாக செயல்படுவது உங்கள் சிறப்பு!
38. தொலைத்தொடர்பு பணியில் சிறப்பாய் செயல்படுபவர் நீங்கள்!
39. பொது நலத்திற்கு பின்பே தன்னலம் என்ற கொள்கை உடையவர் நீங்கள்!
40. வியக்கத்தக்க விகடகவித்துவம் உடையவர் நீங்கள்!
மிதுனம் ராசி நேயர்களே உங்கள் நற்குணங்களாகிய இனியவை 40ல் இல்லாத நேயர்கள் இனியாவது தங்களை வெளிப்படுத்திக்கொண்டு தங்கள் வெற்றி வாகையை சூடப்போவது நிச்சயம்!
வாழ்க வளமுடன்!
படைப்பு Rtn Phf ஆலயம் ஜி சுவாமிநாதன் DA, BA, MSc (Astro), MA (Philo).,
தொடர்புக்கு: 9842208655 / 0421 4238655
Touch the channel link below!
Comments
Post a Comment