ரிஷபம் ராசி- இனியவை 40
ரிஷபம் ராசி - இனியவை 40
1. எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாமல் செயல்படுபவர் நீங்கள்!
2. பிடித்த வேலை என்றால் பிடிவாதமாக நின்று வெல்பவர் நீங்கள்!
3. பறவைகள், விலங்குகள் மீது பாசம் செலுத்துபவர் நீங்கள்!
4. உங்களை போன்று நினைவாற்றல் நினைத்து பார்த்தாலும் யாருக்குமில்லை!
5. காரியம் ஆற்றுவதில் கன கச்சிதமானவர் நீங்கள்!
6. எடுத்த காரியத்தை எந்நிலையிலும் மாறாமல் சாதிக்க கூடியவர் நீங்கள்!
7. நேர்மைக்கு புறம்பாக செயல்படாதவர் நீங்கள்!
8. உறவினர்களை ஒருங்கிணைப்பவர்கள் நீங்கள்!
9. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டீர்கள்!
10. குடும்பத்தினர்களை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்!
11. ஒரே தொழிலை தேர்ந்தெடுத்து உன்மையாய் உழைத்து வெற்றி பெறுவீர்கள்!
12. பெரும்பாலும் காதல் வலையில் விழ மாட்டீர்கள் நீங்கள்!
13. சிக்கனமாய் செலவு செய்பவர் நீங்கள் தேவையான நேரத்தில் பகட்டாய் செலவிடுவீர்!
14. கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உள்ளவர் நீங்கள்!
15. உடல் பயிற்சியில் அக்கறை கொண்டவர் நீங்கள்!
16. பகட்டாய் ஆடை உடுத்தும் வழக்கம் உடையவர் நீங்கள்!
17. தர்க்கம் புரிவதில் வல்லவர் நீங்கள்!
18. குழந்தைகளை கண்டிப்பாய் வளர்ப்பவர் நீங்கள்!
19.தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் நீங்கள்!
20. நேரந்தவறாமை சரியாக கடைபிடிப்பவர் நீங்கள்!
21. கற்பனை அறிவில் கரை கண்டவர் நீங்கள்!
22. சொல்லாற்றல், செயலாற்றல், பேச்சாற்றல் உடையவர் நீங்கள்!
23. பாத்திரம் அறிந்து பிச்சையிடுபவர் நீங்கள் !
24. தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளாதீர் நீங்கள்!
25. யாருடைய பொருளுக்கும் ஆசைபடாதவர், யாருக்கும் வாரி வழங்காதவர் நீங்கள்!
26. காரண காரியம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சுமத்தாதவர் நீங்கள்!
27. தன் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதவர், பிறர் உரிமையை தட்டி படிக்காதவர்!
28. குடும்ப பாரம்பரியத்தை பறைசாற்றுபவர் நீங்கள்!
29. கடவுள் நம்பிக்கையை விட தன்னம்பிக்கையே அதிகம் உங்களுக்கு!
30. முன்னோர் சொத்தை காப்பாற்றுபவர் நீங்கள்!
31. கடன் வாங்குவதுமில்லை கடன் கொடுப்பதுவும் இல்லை என்ற கொள்கை உடையவர் நீங்கள்!
32. காசுக்காக காக்காய் பிடிக்காதவர் நீங்கள்!
33. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தும் ஆண்கள், பெண்கள்!
34. தன் திறமைக்கேற்ற ஊதியத்தை கேட்டு பெறுபவர் நீங்கள்!
35. இயற்கை காட்சிகளை விரும்புபவர் நீங்கள்!
36. இயல், இசை, நடிப்பு, நாட்டியம் போன்ற பல கலைகளை கற்க ஆர்வம் காட்டுவீர்கள்!
37. கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்!
38. சிறுவயதில் நடந்த சம்பவங்களையும் மறக்காமல் அசைபோடுபவர் நீங்கள்!
39. நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என்று தீவிரமாக உழைப்பவர் நீங்கள்!
40. மொத்தத்தில் வாய் சொல்லில் வீரம், செயல்களில் தீரம், மனதில் உரம் இவைகள் ஒருங்கே பெற்றவர் நீங்கள்!
ரிஷபம் ராசி நேயர்களே இனியவை 40ம் இனிதே பெற்று இன்புற்று வாழ இனிய வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!
Touch the link below
Comments
Post a Comment