மேஷம் ராசி -இனியவை 40
மேஷம் ராசி- இனியவை 40!
2. முகத்திற்கு முன் எதையும் பேசுவது, முகத்திற்கு பின் எதையும் பேசாமல் இருப்பது!
3. தவறு செய்தவரை உடனே தண்டிப்பது, பழிவாங்கும் உணர்வு எப்போதும் இல்லாமை!
4. எடுத்த செயலை உடனே செயலாற்றுவது, தள்ளி போடுவது அகராதியில் இல்லை!
5. காரண காரியம் இல்லாமல் யாரையும் தண்டிக்காமை!
6. சொத்தே அழிந்தாலும் சொன்ன வாக்கு தவறாமை!
7. சோம்பேறித்தனம் என்பது தள்ளாடும் வயது வரை இல்லை!
8. காவல் துறையில் இருந்தாலும் கண்டிப்பாய் செயல்படுவது!
9. உயிரே போனாலும் நேர்மை தவறாதவர்!
10. காசுக்காக யாரையும் காட்டிக்கொடுக்காமை!
11. மக்கள் பணியில் சுயநலமின்றி செயல்படுவது!
12. உயிரே போனாலும் தன்மானத்தை இழக்காமை!
13. உழைக்காமல் வரும் பணத்தை எப்போதும் ஏற்காமை!
14. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புபவர் !
15. கனவிலும் யாரையும் காட்டிக்கொடுக்காமை!
16. செய் அல்லது செத்து மடி என்ற கொள்கை உடையவர்!
17. விவேகத்தை விட வேகமே மேல் என்ற கொள்கை உடையவர்!
18. குறுக்கு வழியை விரும்பாமை நேர்வழியே மேல் என்ற கொள்கை உடையவர்!
19. இயன்றவரை இல்லாதவர்க்கு கொடுக்கும் குணம் உடையவர்!
20. துன்பத்தை ஒரு நொடியில் மறந்து விட்டு இன்பத்தை நோக்கி பயணத்தை தொடர்பவர்!
21. காசுக்காக யார் காலிலும் விழாதவர்!
22. காரியம் சாதிக்க யாரையும் காக்காய் பிடிக்காதவர்!
23. ஆணுக்கு நிகரான துணிச்சலான மேஷ ராசி பெண்கள்!
24. ஆண் மகன் இல்லை என்ற குறை போக்கும் மேஷ ராசி பெண்மணிகள்!
25. முடிவு எடுத்துவிட்டால் எந்த நிலையிலும் பின் வாங்காதவர்!
26. சட்டம் ஒழுங்கை காக்கும் உண்மையான உயர் அதிகாரிகள் நீங்கள்!
27. வஞ்சகமும் சூழ்ச்சியும் அறியாதவர் நீங்கள்!
28. கண்டிப்பான குடும்பத் தலைவர்/ தலைவி நீங்கள்!
29. இலக்குகளை தேர்ந்தெடுத்து கடுமையான சோதனைகளை வெற்றி வாகை சூடுவீர்!
30. வாழ்க்கையே போர்க்களம் என்றாலும், வாழ்ந்து காட்டியே தீருவேன் என்ற பிடிவாதக்காரர்!
31. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல என்பவர் நீங்கள்!
32. வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு நிகர் நீங்களே உங்களை மிஞ்ச யாரும் இல்லை!
33. போட்டி என்று வந்து விட்டால் உங்களுக்கு நிகர் யாருமில்லை!
34. கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்பி வாங்கும் எண்ணம் இல்லாதவர்!
35. தவறு செய்துவிட்டால் அண்ணன், தம்பி, அக்கா என்று யாரையும் மன்னிக்காதவர்!
36. வாழ்ந்தால் மானம், ரோஷம், கௌரவம், தன்மானம் இதை இழக்காமல் வாழ்வது உங்கள் ஸ்டைல்!
37. சரியான முன் யோசனை இல்லாவிட்டாலும் தெளிவாக செயல்படுபவர் நீங்கள்!
38. கண்ணியம் காப்பதிலும் காரியம் ஆற்றுவதிலும் கடமையை செய்பவதிலும் உங்களுக்கு நிகர் யாருமில்லை!
39. மனதில் எது உங்களுக்கு சரி என்று படுகிறதோ அதை உடனே செய்பவர் நீங்கள்!
40. பொய்யான வாழ்க்கை 100 வருடம் வாழ்வதைவிட மெய்யான வாழ்க்கை 1 நாள் வாழ்வதே மேல் என்ற கொள்கை உடையவர் நீங்கள்!
"மொத்தத்தில் மேஷ ராசி நேயர்கள் இனியவை நாற்பதை இனியாவது தக்கவைத்து வாழ்வில் மேன்மை அடையுங்கள்"
படைப்பு Rtn Phf Aalayam G Swaminathan DA, BA, MA (Philo)., MSc (Astro).,
தொடர்புக்கு :9842208655 / 0421 4238655
*வாழ்க வளமுடன்*
Comments
Post a Comment